தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2023, 10:08 PM IST

ETV Bharat / state

சென்னை - இந்தோனேசியா இடையே நேரடி தினசரி விமான போக்குவரத்து சேவை தொடங்கியது!

சென்னையில் இருந்து இந்தோனேசியா நாட்டிற்கு இதுவரை நேரடி விமான சேவை இல்லாத நிலையில் இன்றிலிருந்து தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை - இந்தோனேசியா இடையே நேரடி தினசரி விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்!
சென்னை - இந்தோனேசியா இடையே நேரடி தினசரி விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்!

சென்னை: இந்தோனேசியாவின் சுற்றுலா தலமான குவாளா நாமு - சென்னை இடையே தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை இன்றிலிருந்து (01.08.2023) தொடங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, குவாளா நாமு. அப்பகுதிக்கு சென்னையில் இருந்து இதுவரை நேரடி விமான சேவை இல்லை. அங்கு செல்ல வேண்டும் என்றால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று, அங்கு இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் இந்தோனேசியாவின் குவாளா நாமுவுக்கு பயணிகள் செல்கின்றனர்.

அதேபோல் இந்தோனேசியாவின் குவாளா நாமுவில் இருந்து சென்னை வர வேண்டிய பயணிகளும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் வழியாக சென்னை வருகின்றனர். இந்நிலையில் இந்தோனேசிய மக்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்குப் பெருமளவு வருகின்றனர். தமிழ்நாடு கலாசாரம், பராம்பரியம் நிறைந்த இடம்.

அதோடு மட்டுமின்றி சுற்றுலா தலங்கள், கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. மேலும் ஆன்மிகத்தில் புகழ் வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த மாநிலமாகவும் இருக்கிறது. இது இந்தோனேசியா நாட்டு மக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.

இதையடுத்து இந்தோனேசிய நாட்டினர், பெருமளவு சுற்றுலாப் பயணிகளாக சென்னை வருகின்றனர். அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று இணைப்பு விமானங்களில் வருவதால், பயண நேரம் அதிகரிப்பதோடு கூடுதல் பணமும் செலவாகிறது.

இதை அறிந்த இந்தோனேசிய நாட்டில் உள்ள, பாட்டிக் ஏர் விமான நிறுவனம், இந்தோனேசியா நாட்டில் உள்ள குவாளா நாமு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தினமும் சென்னைக்கு நேரடி தினசரி விமான சேவையை தொடங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் இந்தோனேசியாவின் குவாளா நாமு - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் குவாளா நாமு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தினமும் மாலை புறப்படும் போயிங் 738 ரக, பாட்டிக் ஏர் நிறுவன விமானம், இரவு 9:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறது. அதன் பின்பு சென்னையில் இருந்து இரவு 11:10க்கு புறப்படும் இந்த விமானம், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு இந்தோனேசியா நாட்டின் குவாளா நாமு சர்வதேச விமான நிலையம் சென்றடைகிறது.

இந்த நேரடி விமான சேவையால் இனிமேல் சென்னை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் திரைப்பட படக் குழுவினர், சரித்திர வரலாறு சம்பந்தமான ஆராய்ச்சி குழுவினர் என்று பல தரப்பினருக்கும், இந்த புதிய விமான சேவை பயனளிப்பதாக இருக்கும்.

மேலும் இந்தோனேசியா அருகே உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சுமித்ரா தீவு உள்ளது. சுமத்ரா தீவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி... பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details