சென்னை: ஜேஇஇ 2023 தேர்வர்கள் சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களைப் பெறும் வகையில் செயல்விளக்க நாள் நிகழ்ச்சியும் மற்றும் சேரும் முன்னரே மாணவர்கள் நேரில் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என சென்னை ஐஐடி யின் புதிய ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் வரும் ஜூன் 17, 18 தேதிகளிலும், நேரடியாக ஜூன் 24ந் தேதியில் இணைந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் visit.askiitm.com என்னும் இணைய முகவரியில் முன்பதிவு செய்தல் அவசியம் என தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜூன் 16-ஆம் தேதி தான் முன்பதிவு செய்ய இறுதி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால் செயல்விளக்க விரிவுரைகளைக் கேட்கவும், மாணவர் கிளப்புகளை சந்திக்கவும் தேர்வெழுதுவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இதனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளவும் என கூறியுள்ளது.
தேர்வு எழுதுவோரும் அவர்களின் பெற்றோர்களும் சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டு, தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, கூறும்போது, “2000 ஆண்டு முதல் 2009 வரை ஆசிரிய உறுப்பினராக இருந்தபோது கலந்தாய்வு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். அப்போதெல்லாம் ஜேஇஇ மாணவர்கள் சென்னை ஐஐடிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு அம்சங்கள், விளையாட்டு, உணவு போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்து இருக்கிறோம்.
இதையும் படிங்க:Coimbatore: கேஸ் கசிவால் தீ விபத்து! வட மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் படுகாயம்