தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- அரசே பயிற்சி அளிக்கிறது! - தமிழ்நாடு காவல்துறை தொடர்பான செய்திகள்

எஸ்.ஐ. தேர்விற்கான நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஏப்.4 முதல் கிண்டியில் இயங்கி வரும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ. தேர்விற்கான நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஏப்.4 முதல் தொடங்கவுள்ளது
எஸ்.ஐ. தேர்விற்கான நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஏப்.4 முதல் தொடங்கவுள்ளது

By

Published : Apr 1, 2022, 7:43 PM IST

Updated : Apr 1, 2022, 8:42 PM IST

சென்னை:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வளார் (SI) தேர்வுகளுக்கான நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் 04/04/2022 முதல் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். TELEGRAM LINK: https://t.me/+R_zTdZDQLWc4NGI1

எனவே, உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாகவோ அல்லது இணைய வாயிலாகவோ கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் திரு.கொ.வீர ராகவ ராவ், தெரிவித்துள்ளார்.

மார்ச் 8 அன்று இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான கடைசி நாள் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் தகவல்களுக்கு: எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?- அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இதையும் படிங்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

Last Updated : Apr 1, 2022, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details