இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக துணை பொதுச்செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளதாலும், திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க. தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாலும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து இருவரும் விடுவிக்கப்படுகின்றனர்.
திமுகவில் புதிய கொள்கை பரப்பு செயலாளர்கள் நியமனம்...! - முனைவர் சபாபதி மோகன்
சென்னை: திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
புதிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்...!
இதனையடுத்து, ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்துவரும், திருச்சி சிவாவுடன், திண்டுக்கல். ஐ. லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!