கரோனா வைரஸ் தொற்று பொதுமக்களைப் பாதிக்காமல் தடுக்க உள்ளாட்சித் துறை சார்பில் பல்வேறு நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், விழிப்புணர்வு நிகழ்வுகளையும் சேர்த்தே செயல்படுத்தி வருகிறது.
’சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள்’ - கரோனா விழிப்புணர்வு காணொலி - chennai news
சென்னை: கோவிட் 19 வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு குறித்து, சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள் என்ற பெயரில் அமைச்சர் வேலுமணி காணொலியினை வெளியிட்டார்.
அந்த வகையில், தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி காணொலி ஒன்றை வெளியிட்டுளார். சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள் எனத் தொடங்கும் இந்த வீடியோ, சுற்றமும் சுத்தமும் நம் கையில் என முடிகிறது. இதில் பொதுமக்கள் கரோனா நோய் தொற்று பரவாமல் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள், செயல்முறைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பரிதாப உயிரிழப்பு!