சென்னை:தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கைகளின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான நாளை (3.6.2022) ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து லட்சமும், வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.