தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக திமுக கட்சிகளை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்-தினகரன் - திமுக

சென்னை: அதிமுக, திமுக கட்சிகளை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளாா்.

அதிமுக

By

Published : Mar 15, 2019, 8:37 PM IST

சென்னையில் நடந்த செய்தியாளா் கூட்டத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியதாவது, தனது கட்சி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அனைத்து கட்சிகளும் எதிர்பாரத விதமாக மிகப்பெரிய வெற்றியை தனது கட்சி பெறும் எனவும் கூறினாா்.

மேலும் அவா் கூறுகையில், தான் டெபாசிட் வாங்க மாட்டேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் சொன்னதை ஊடகங்கள் வெளியிட்டது, ஆனால் மக்கள் அதனை எள்ளி நகையாடுனாா்கள். அதிமுக-திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டதாகவும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் தங்களுடன் இருக்கிறார்கள் எனவும் கூறினாா்.

அமமுக கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.


ABOUT THE AUTHOR

...view details