சென்னை:புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக டெல்லியில் நேற்று (மே 28) நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கலந்து கொண்டனர். முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருப்பிடம் அருகே பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் பாஜக ஆன்மீக பிரிவு சார்பில் ஆதீனங்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்வுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் அழைத்தார்கள்.