தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் வீரவணக்க நாள்: நினைவிடத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை!

சென்னை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காவலர் வீரவணக்க நாள்: நினைவிடத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை!
காவலர் வீரவணக்க நாள்: நினைவிடத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை!

By

Published : Oct 21, 2020, 10:29 AM IST

எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் பணியின்போது 292 காவலர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நினைவு சின்னத்தின் முன் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக நேற்று (அக். 20) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வீர காவலர் நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்தார்.

இதையும் படிங்க...காவலர் வீரவணக்க நாள்: நினைவுருவ கற்சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details