தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் பணிதான் முடிகிறது, மக்கள் பணி எப்போதும் தொடரும் - ஓய்வுபெறும் காவல் ஆணையர் ரவி - டிஜிபி சைலேந்திர பாபு

காவல்பணி தான் இன்றுடன் முடிவடைகிறதே தவிர, மக்கள் பணி தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என ஓய்வுபெறும் காவல் ஆணையர் ரவி பிரிவு உபச்சார விழாவில் தெரிவித்துள்ளார்.

காவல் பணிதான் இன்றுடன் முடிகிறதே தவிற மக்கள் பணி எப்போதும் தொடரும் - ஓய்வுபெறும் காவல் ஆணையர் ரவி
காவல் பணிதான் இன்றுடன் முடிகிறதே தவிற மக்கள் பணி எப்போதும் தொடரும் - ஓய்வுபெறும் காவல் ஆணையர் ரவி

By

Published : Jun 1, 2022, 9:09 AM IST

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி ரவியின் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி ரவி ஏற்றுக்கொண்டதுடன், டி.ஜி.பி சைலேந்திர பாபுவால் வழங்கப்பட்ட நினைவுப் பரிசினையும் அவர் பெற்றுக்கொண்டார்.

டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி சக்கீல் அக்தர், சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டி.ஜி.பி ரவி தனது பேட்சில் பயின்ற தனது நண்பர் எனவும் அவர் மனம் மற்றும் உடலளவில் வலிமை மிக்கவர் எனவும் தெரிவித்தார். மேலும், அவரது ஓய்வு காலம் குடும்பத்தாருடன் இன்பமாய் கழிய தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

டிஜிபி ரவிக்கு பிரிவுபச்சார விழா

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு,

32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் திறம்பட பணியாற்றி ஓய்வுபெறும் டி.ஜி.பி ரவியின் பிரிவு உபசார விழாவை தலைமையேற்று அவரை வழியனுப்புவதில் தான் பெருமை அடைவதாக தெரிவித்தார். அப்போதைய காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுத டெல்லி செல்லும் நபர்களுக்கு இலவசமாக அசோக் விஹார் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில்

உண்டு உறைவிடப் பள்ளி அமைத்துக் கொடுத்த பெருமைக்குரிய நபர் ரவி எனவும் தெரிவித்த அவர், 31 ஆண்டுகளை கடந்தும் பணியாற்றும் ஆர்வம் அவரிடம் குறையவில்லை எனவும் தெரிவித்தார். இன்று ஓய்வு பெற்றாலும் டி.ஜி.பி ரவியின் அறிவுரைகள் காவல் துறைக்கு அவசியம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய டி.ஜி.பி ரவி, காவல்துறை இயக்குநர் தனது ஓய்வு பற்றி பேசினார்,

ஆனால் தனது பணி இன்றிரவு 12 மணி வரை உள்ளது என்றே தான் கருதுவதாகவும், அந்த நேரத்தில் தன்னால் இயன்ற மக்கள் பணியை கட்டாயம் செய்வேன் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த 107 நாட்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 97 குற்றவாளிகளை தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகக் கூறிய அவர்,

தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மக்கள் பணியை அனைவரும் சிறப்பாக செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலை எப்போது இல்லாத வகையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், தன் காவல் பணிதான் இன்றுடன் முடிவடைகிறதே தவிற தனது மக்கள் பணி எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும், காக்கிச் சட்டையை இனி அணிய முடியாது என்ற ஒரே வருத்ததுடன் மீதமுள்ள காலத்தை குடும்பத்துடன் கழிப்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஓய்வுபெற்றார்! அடுத்த வாய்ப்பு யாருக்கு? விவரம் உள்ளே..!

ABOUT THE AUTHOR

...view details