சென்னை:தேவர் ஜெயந்தி விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ள அலுவலர்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டின் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த அக்.30ஆம் தேதியன்று நடைபெற்றது.
சட்டம் - ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் மயில்வாகனன், 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10ஆயிரம் காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள், ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படாதவண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.