தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்! - dgp house

சென்னை: டிஎஸ்பி (துணை காவல் கண்காணிப்பாளர்) வீட்டில் வாடகைக்கு இருந்த இளைஞர் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருள்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!
டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!

By

Published : Aug 4, 2020, 4:11 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அங்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

சோதனை செய்ததில் ஏராளமான போதைப் பொருள்கள் இருந்தன. அவற்றை பாக்கெட்டாக தயாரிப்பதற்கு இருந்த மெஷின், பாலீத்தின் கவர்கள், கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர். பின்னர் இது குறித்து விசாரணை செய்ததில் சிபிசிஐடியில் டிஎஸ்பியாக பணிபுரியும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!

அந்த வீட்டில் தேனியைச் சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு குடியிருந்துள்ளார். டிஎஸ்பி வீடு என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் என்பதால், போதைப்பொருள்களை வைத்து விற்பனை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அருணுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது, போதைப்பொருள் விற்பனைக்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அருணிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் இதில் சிபிசிஐடி டிஎஸ்பிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இது குறித்து சிபிசிஐடி துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணையும் நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும், விசாரணையின் போது குறுக்கிட்டதாக சொல்லப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details