சென்னை:கடந்த சில ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பல பேர் உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றன. இது போன்ற விபத்துகளுக்கு பேருந்து பராமரிப்பின்மையே காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
10 ஆண்டுகளில் நிகழ்ந்த பேருந்து விபத்துகள் - விபரம் கேட்ட டிஜிபி
கடந்த 10 ஆண்டுகளில் அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து குறித்த விபரங்களை கேட்டு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரதது பேருந்துகளால் ஏற்பட்டுள்ள விபத்துகள் எத்தனை, விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், அந்த விபத்து வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது என்ற விவரங்கள் குறித்து கேட்டு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்