தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாறு ஆற்றங்கரையோரம் 60,000 மரக்கன்றுகள் - துணைமேயர் மகேஷ்குமார்

சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் 2 கி.மீ தூரத்திற்கு 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அடையாறு ஆற்றங்கரையோரம் 60,000 மரக்கன்றுகள் - துணைமேயர் மகேஷ் குமார்
அடையாறு ஆற்றங்கரையோரம் 60,000 மரக்கன்றுகள் - துணைமேயர் மகேஷ் குமார்

By

Published : Mar 11, 2022, 7:20 AM IST

சென்னை : 163 வது வார்டு அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் மரக்கன்றுகள் பராமரிக்கும் பணியை சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை மாநகராட்சியை பசுமையானதாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போதைய உள்ளாட்சித் அமைச்சரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் அமைத்தார்.

தற்போது சென்னை மாநகராட்சி பசுமையாக்கும் வகையில் அடையாறு ஆற்றங்கரையோரம் 11 வருங்காலங்களில் அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு சென்னையை பசுமையான நகராக மாற்றுவோம்.

சென்னை மாநகர பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோரமுள்ள மழை நீர் வடிகால் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்கிறோம். மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்றவாறு செயல்படுவோம்.

நீர்வழித்தட கரையோரங்களில் சைக்கிளிங் பயற்சி மேற்கொள்வதற்கு பாதைகள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஆற்றங்கரையில் இருக்கும் மக்களுக்கு எந்த வகை பாதிப்பு வராமல் அவர்களுக்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்த பிறகு அனைத்து வகையான பராமரிப்பு பணிகள் நடைபெறும்" என மகேஸ்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'மாநில அரசின் அதிகாரத்தை அணைகள் பாதுகாப்பு சட்டம் பறிக்காது' - மத்திய நீர்வளத்துறை துணை ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details