தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிசை மாற்று வாரியப் பணிகள் குறித்து ஆலோசித்த துணை முதலமைச்சர்! - Deputy cm ops dicuss about housing board activities

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

குடிசை மாற்று வாரியப் பணிகளை ஆய்வு செய்த ஓபிஎஸ்
குடிசை மாற்று வாரியப் பணிகளை ஆய்வு செய்த ஓபிஎஸ்

By

Published : Dec 13, 2019, 9:30 PM IST

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது.

இதில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியத்தால், தமிழ்நாட்டில் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முன்னேற்றத்தில் உள்ள வீடுகள், ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ள வீடுகள், ஒப்பந்தம் கோரப்படவுள்ளவை மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டியவை குறித்து கோட்ட வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து ஆலோசனை செய்தார்.

மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதித் துறை முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமச் செயலர் கார்த்திகேயன், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தர ராஜ், வாரியத் தலை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் 2.0 - விஜயகாந்த் பட பாணியில் கலக்கும் துணை முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details