தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு' திடீரென்று மாநில உரிமை பேசும் ஓபிஎஸ்

சென்னை: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் மாநில அரசு சுயமாக நிதியை திரட்டவும், புதிய வரிகளை விதிக்கவும் அதிகாரமில்லாத சூழல் நிலவுகிறது. மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு வரி விகிதத்தை மாற்ற வேண்டும் எனவும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

By

Published : Feb 25, 2021, 2:42 PM IST

வரும் 2021-22 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் (பிப்.23) தாக்கல் செய்தார். அதில், மாநில அரசின் வருவாய் குறைந்துவருவதாகத் தெரிவித்த அவர், அதற்கு கரோனா தொற்று, பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை காரணம் என்றாலும், மத்திய அரசு கலால் வரியை குறைத்துவிட்டு செஸ் எனப்படும் மேல் வரியை அதிகரித்ததே காரணம் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு

மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு
நடப்பு நிதியாண்டில், தமிழகத்துக்கான மத்திய அரசு பங்கு 32,849 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில், வெறும் 23,039 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக வரி பங்கு சற்று குறைந்திருந்தாலும், மத்திய அரசு வரிவிகிதங்களில் மேல் வரி, கூடுதல் கட்டணங்களின் பங்கு அதிகரித்துள்ளதால் மாநிலத்துத்துக்கு பகிரப்படும் மத்திய வரிகள் குறைந்துள்ளன. மத்திய அரசு வருவாயில் மாநிலங்கள் தங்களுக்கு உரிய பங்கை பெற மேல்வரி, கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதங்களுடன் இணைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.


வரி வருவாய்: மத்திய Vs மாநில அரசு

வரி வருவாய்: மத்திய Vs மாநில அரசு
பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியில் மத்திய அரசின் பங்கு கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்த வரியில் மாநில அரசின் பங்கு 39 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என நிதிக் குழுவின் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசு எண்ணெய், தானியங்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீது அண்மையில் வரி குறைக்கப்பட்டு, இவற்றின் மீது மேல்வரியை விதித்துள்ளது. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வருமான வரி மீதான மேல் வரியை உயர்த்தப்பட்டுள்ளது.நிதிக் குழு மீது அதிருப்திஇதற்கிடையே, 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி குறைந்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வரியிலிருந்து தமிழகத்துக்கு 27,148 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
நிதிக் குழு மீது அதிருப்தி

இது தொடர்பாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் பேசுகையில், "பெட்ரோல் மீதான கலால் வரி ஏப்ரல் மாதத்தில் 9.48 ரூபாயாக இருந்தது, அதனை மே மாதத்தில் 2.98 ரூபாயாக குறைத்த மத்திய அரசு, செஸ்- ஐ 12 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதும் இதேபோல் வரி குறைக்கப்பட்டு, செஸ் உயர்த்தப்பட்டுள்ளது. செஸ் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளதால் நிதிக் குழு பரிந்துரைப்படி மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய 41 சதவிகிதத்துக்கு 31 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன் பின்

இந்நிலையில், மத்திய அரசிடம் கிடைக்க வேண்டிய ஒட்டுமொத்த வரி வருவாயில், மத்திய அரசு ஒப்புக்கொண்ட தொகையைவிட 11,897 கோடி ரூபாய் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாயும் குறைந்துள்ளது, இதனால் மாநில பொருளாதரத்தில் கடன் சுமை கணிசமாக அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

மாநில உரிமை பேசும் அதிமுக

மாநில உரிமை பேசும் அதிமுக

மத்திய பாஜக அரசின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு மாநில அரசுக்கு உரிய நிதியை வழங்குமாறு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன் பின்

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் மாநில அரசு சுயமாக நிதியை திரட்டவும், புதிய வரிகளை விதிக்கவும் அதிகாரமில்லாத சூழல் நிலவுகிறது. மத்திய அரசு இது போன்ற நிதிப் பங்கீடை திட்டமிட்டு குறைப்பதால் மாநில அரசுகள் உள்ளூர் திரையரங்குகள், மதுபானங்களின் மீது அளவுக்கு அதிகமான வரியை விதிக்கின்றன. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது போன்றவற்றை சார்ந்து மாநில பொருளாதார உள்ளது பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details