தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை! - காவல்துறை விசாரணை

சென்னை: ஆதம்பாக்கம் அருகே கணவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Depressed wife commits suicide by coronation infection
Depressed wife commits suicide by coronation infection

By

Published : Oct 8, 2020, 3:03 AM IST

சென்னை ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியர் குமரவேல்(45) - விஜியகுமாரி(40). இவர்கள் தங்களது மகன் மற்றும் மகளுடன் வசித்து அப்பகுதியில் கும்பத்தோடு வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குமரவேலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குமரவேலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விஜயகுமாரியிடம் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயகுமாரி படுக்கை அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார். இதனால் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

மேலும், கதவைத் தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த மகனும், மகளும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமாரி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மூதாட்டி கழுத்தறுத்து கொலை - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details