தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீண்ட நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பின்னர் தீபாவளி, தொடர் கனமழையால் கடந்த ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மழை நின்ற பகுதிகளில் நாளை (நவ.15) முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.