சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட அளவில் கல்வி நிர்வாகத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் செய்து வருகின்றனர். தற்பொழுது மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வும் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிடம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் இன்று (நவ.6) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 'புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக முருகன், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ணபிரியா, கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பால தண்டாயுதபாணி, ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக சம்பத், தொடக்கக்கல்வித்துறையின் துணை இயக்குனர் (சட்டம்) சிவக்குமார், பள்ளிக்கல்வித்துறையின் துணை இயக்குனர் (மின்ஆளுமை) குணசேகரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துணை இயக்கனர்களாக குழந்தைராஜன், ராமன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனராக சரஸ்வதி, தனியார் பள்ளிகள் துணை இயக்குனராக சின்னராஜூ ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.