மதுரை: ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள அட்டாக் பாண்டி உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்க அனுமதிக்கக்கோரி, அவரது மனைவி உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் தயாளு, சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் மனைவி ஆவார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் 'எனது கணவர் அட்டாக் பாண்டி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் (தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில்) தொடரப்பட்ட வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தற்போது சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தாயைப் பார்க்க அட்டாக் பாண்டிக்கான சிறை விடுப்பு மறுப்பு - மனு தள்ளுபடி - அட்டாக் பாண்டிக்கான சிறை விடுப்பு மறுப்பு
பிரபல ரவுடியான அட்டாக் பாண்டி உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்க அனுமதிக்கக்கோரி, அவரது மனைவி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தாயைப் பார்க்க அனுமதிக்கும்படி அட்டாக் பாண்டி சார்பில் மனு
தற்பொழுது எனது கணவரின் தாயாரான ராமுத்தாய்(80) உடல் நலம் குன்றி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, தாயாரைப் பார்க்க வேண்டி எனது கணவரான பாண்டிக்கு 15 நாள் விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்' என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அட்டாக் பாண்டிக்காக அவரது மனைவி விடுப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: "ஒன்றிய அரசு" என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி