தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் கோரிக்கை! - chennai district news

சென்னை: முதுகலை மருத்துவப் பட்ட மேற்படிப்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 50 விழுக்காடு இடத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்கவதற்குச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை டுத்துள்ளனர்.

doctors
doctors

By

Published : Sep 2, 2020, 9:46 AM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவப் பட்ட மேற்படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே வழங்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம் வரவேற்கிறது.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவப் பட்டமேற்படிப்பில் இட ஒதுக்கீடானது 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரசாணை மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டீன் மூலம் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கட்டமைப்பை நாம் வலுப்படுத்த முடிந்தது. இதன்மூலம் மாவட்டதிற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்கும் அளவிற்கு நாம் முன்னேறியுள்ளோம். இருப்பினும் இந்த இடஒதுக்கீடு 2017ஆம் ஆண்டு நீட் (NEET) கொண்டுவரப்பட்டபோது ரத்துசெய்யப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி உருவானதுதான் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பின் சார்பில் சுமார் 15 ஆயிரம் மருத்துவர்கள் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ளது. ஆதலால் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில்கொண்டு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மீண்டும் பழைய இடத்திற்கே முழுமையாக பணியமர்த்த வேண்டும்.

மருத்துவர்கள் மீது போடப்பட்டிருக்கும் 17 பி எனப்படும் குறிப்பாணைகளை ரத்துசெய்ய வேண்டும் என்பதையும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதேவேளையில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்புக்கு வலுசேர்க்கும்விதத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு முதுகலை பட்டமேற்படிப்பு, உயர்சிகிச்சை மேல்படிப்புகளில் (DM/Mch) இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்த அரசாணையை சட்டமாக கொண்டுவந்து இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக்க அரசு மருத்துவர்களுக்கு கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு முதுகலை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களில் இட ஒதுக்கீட்டை சட்டமாக கொண்டுவரும் பட்சத்தில், தமிழ்நாடு இந்திய நாட்டுக்கே முன்னுதாரணமாக அமைந்து தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் உள்ள கிராமங்களில் மட்டுமல்லாது அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உயர் சிகிச்சை அளிப்பதற்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும்" எனக் குறிப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:பத்திரிகை ஒரு புரட்சிகர ஆயுதம் - புரட்சியாளர் ஹோ சி மின்

ABOUT THE AUTHOR

...view details