தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
15:42 May 29
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி, அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
அதையடுத்து தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தங்களைச் சட்டபூர்வமான வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வழங்கில் மே 27ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் என். கிருபாகரன், அப்துல்குத்தூஸ், தீபா, தீபக் இருவரையும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தனர்.
அதையடுத்து இன்று சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து தீபா, தீபக் இருவரையும் நேரடி வாரிசுகளாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக்க அவசர சட்டம்!