தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காவிரி படுகையை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்"

சென்னை: காவிரி படுகையை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாய பிரதிநிதிகள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.

காவேரி படுகையை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - விவசாயகள் மனு.

By

Published : Jul 2, 2019, 4:55 PM IST

எட்டு வழி சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி மனு அளித்தனர்.

பின்னர் விவசாய சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; " காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நடவடிக்கையை எடுத்து வரும் மத்திய- மாநில அரசை கண்டிக்கும் வகையில் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசினோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளோம். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தருவதாக உறுதியளித்தார்.

காவேரி படுகையை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - விவசாயகள் மனு.

மேலும் இதனை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூக், நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details