சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக பணியாற்றி வருபவர் தாமராஜ்(36). இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை புகார் நேற்று (ஜூலை 4) ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி இருந்து வருகின்றனர்.
நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் - death threat to nadigar sangam executives
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே சங்கத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய கோடம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகர் ராஜதுரை என்பவர் சங்க உறுப்பினர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மே மாதம் 27ஆம் தேதி ஆடியோ ஒன்றை அனுப்பினார். அந்த ஆடியோவில் சங்க நிர்வாகிகளை மிகவும் மோசமாக திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்தார். இதனடிப்படையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு ஆடியோ ஆதரங்களையும் அளித்துள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: படபிடிப்பில் காலில் காயம் - காட்டிக்கொள்ளாமல் நடித்த விஷால்...