தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 30, 2021, 9:13 PM IST

Updated : Jun 30, 2021, 11:29 PM IST

ETV Bharat / state

கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கோரிக்கை!

தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பு
தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பு

சென்னை: தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், நாச்சியாள் சுகந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, “கடந்த ஓராண்டிற்கு மேலாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் 14 கோரிக்கைகளை அரசிற்கு தெரிவிக்க உள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் தேவையான அளவு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட விடுதிகளில் கழிப்பறைகள் முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது.

தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பு

அதேபோல் நூலகங்களிலும் போதுமான அளவு நூலகர்கள் நியமனம் செய்யப்படவில்லை. எனவே விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி பாடங்களில் பேரிடர் மேலாண்மை குறித்தும் சேர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையினை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்துவதற்கு பதிலாக, தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். கல்லூரியில் காலை, மாலை என இரு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு ஒரு மாணவர்கள் ஒரு வேளை உணவினை இழக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளிகளில் வழங்குவது போல் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வழங்க வேண்டும்.

பழங்குடியின மாணவர்கள் இருக்கும் மலைப் பகுதியில் போதுமான ஆசிரியர்களை பணியில் நியமனம் செய்ய வேண்டும். மேலும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கிறார்களா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். கல்லூரிகளில் மாணவர் பேரவைக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் பெயர்களில் மையங்கள் உருவாக்க வேண்டும்.தற்போது எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கிடைத்தாலும் போதுமான தரமான கல்வி கிடைக்கவில்லை அதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் கொள்ளை

Last Updated : Jun 30, 2021, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details