தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளை மீறி கோயிலில் பால்குடம் - அறநிலையத் துறை அலுவலர்களிடம் விசாரணை - pammal

கரோனா விதிமுறைகளை மீறி கோயிலில் பால் குடம் எடுக்க பணம் வசூலித்த அறநிலையத் துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிமுறைகளை மீறி கோவிலில் பால்குடம் - அறநிலை துறை அலுவலர்களிடம் விசாரணை
விதிமுறைகளை மீறி கோவிலில் பால்குடம் - அறநிலை துறை அலுவலர்களிடம் விசாரணை

By

Published : Apr 14, 2021, 7:27 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் அருள்மிகு அமிர்தாம்பிகை ஸ்மேத அர்க்கீஸ்வரர் சூரியத்தமன் கோயில் உள்ளது. 1350 ஆண்டுகள் பழமையான கோயிலில் தமிழ் புத்தாண்டு அன்று பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். கடந்த ஆண்டும் கரோனா காரணமாக தடைப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பால் குடம் எடுக்க அனுமதி கிடைக்குமா என பக்தர்கள் காத்திருந்தனர்.

ஆனால், இந்த ஆண்டும் கரோனா காரணமாக நிகழ்ச்சி நடத்த காவல் துறையினர் தடை விதித்தனர். இருப்பினும், தடையை மீறி கோயிலின் தக்கராக உள்ள தேன்மொழி என்பவரிடம் பால்குடம் எடுக்க 200 ரூபாய் என நூற்றுக்கணக்கான டோக்கன்களை தேதியிட்டு வழங்கியுள்ளார்.

மேலும், பல டோக்கன்களில் கோயில் முத்திரைகள்கூட இல்லாமல் வசூல் செய்துள்ளார். இந்த நிலையில் கரோனா தடையை மீறி இன்று பால் குடம் எடுப்பதாக தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. பின்னர், ரோந்து வாகனத்துடன் கோயில் வளாகத்தில் நிறுத்தி காவல் துறையினர் கண்காணித்தனர். இதனால், கோயில் நிர்வாகம், கோயில் கேட்டை பூட்டிவிட்டு உள்ளே நிர்வாகிகள் மட்டும் பால் குடம் எடுத்துள்ளனர்.

இதனால், பணம் கட்டிய பக்தர்கள் கோயில் வாசல் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து கேட் திறந்து சாமி கும்பிட மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் எடுக்க பணம் கட்டிய பக்தர்கள் தமிழ் புத்தாண்டு அன்று கோயில் நிர்வாகத்துடைய வசூல் எண்ணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சம்மந்தப்பட்ட கோயில் தக்கார் தேன்மொழியிடம் அறநிலையத் துறை அலுவலர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details