தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரின் கெடுபிடி - பால் விற்பனையை புறக்கணிக்க முடிவு - காவல் துறையினருக்கு எதிராக பேசிய பால் முகவர்கள் சமகிகத்தினர்

சென்னை: காவல் துறையினரின் கெடுபிடிகள் தொடருமாயின் ஊரடங்கு முடியும் வரை பால் விற்பனையை முற்றிலுமாக புறக்கணிப்போம் என பால் முகவர்கள் சங்கம் அறிவிதுள்ளது.

Tamilnadu Dairy Agents Association
காவல் துறையினருக்கு எதிராக பேசிய பால் முகவர்கள் சங்கத்தினர்

By

Published : Jun 21, 2020, 9:35 AM IST

கரோனா பேரிடர் காரணமாக பால் விநியோகம் செய்வதிலும், விநியோகம் செய்யப்பட்ட பாலுக்கான தொகை, காலி பால் டப்புகளை பெறுவதிலும் பால் முகவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணையதள கூட்டம் (Zoom Meeting) அதன் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

முதலில் இக்கூட்டத்தில் சீனாவின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரிகளை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஊரடங்கு அமலில் இருக்கும்போது அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்பனைக்கும் விநியோகத்திற்கும் தடையில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், காவல் துறையினரோ பாதுகாப்பு என்கிற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை அரங்கேற்றி வருவதாக கூறினர்.

குறிப்பாக வாகன நடமாட்டத்தை தடுக்கிறோம் என்கிற பெயரில் பிரதான சாலைகள் அனைத்தையும் சவுக்கு கம்புகளால் கட்டி முழுமையாக மூடி விடுகின்றனர். இதனால் பால் நிறுவனங்களின் வாகனங்கள் பால் முகவர்களின் கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் பால் விநியோகம் செய்ய வாகனங்களில் செல்லும் பால் முகவர்களிடமிருந்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, அரசு கூறியுள்ள நேரத்திற்கு முன்னதாகவே கடைகளை மூடச் சொல்லி மிரட்டி, அவர்களின் கடைகளை பூட்டி சாவியை எடுத்துச் செல்வது என பால் விநியோகம் செய்யவிடாமலும், விற்பனை செய்ய முடியாமலும் பால் முகவர்களுக்கு காவல் துறையினர் தொடர்ந்து இடையூறு அளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் பணியில் இருக்கும் பால் முகவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காவல் துறையினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக கூறினர்.

மேலும், பால் முகவர்களுக்கு காவல்துறையினர் இடையூறு செய்யும் நிகழ்வுகள் தொடருமாயின், வருகின்ற புதன்கிழமை முதல் சில்லறை வணிகர்களுக்கு பால் விநியோகம் செய்வதை முற்றிலுமாக நிறுத்துவோம் எனவும், பொதுமக்கள் நலன் கருதி பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்தில் பால் விற்பனை செய்வது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details