அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக ஜெயக்குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ராயபுரம் தொகுதியில் அதிமுக பெயர் சொல்லக்கூடிய கல்வெட்டுக்களை அரசு மறைப்பதாக, தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதிமுக பெயர் சொல்லும் கல்வெட்டுக்கள்: தமிழ்நாடு அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு!
சென்னை: அதிமுக பெயர் சொல்லக்கூடிய கல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசு மறைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெயக்குமாரின் ட்வீட்
அதில், 'ராயபுரம் தொகுதியில் நான் மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளுக்கு சாட்சியாக இருந்த கல்வெட்டுக்களை தற்போதைய தமிழ்நாடு அரசு மறைக்கிறது. இதற்கு யார் காரணம்? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!