தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 8:35 AM IST

ETV Bharat / state

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம்: நோயாளிகள் கடும் அவதி

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் குரோம்பேட்டை டிபி அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்துள்ளது.

மழை வெளத்தால் சூழந்த அரசு மருத்துவமனை
மழை வெளத்தால் சூழந்த அரசு மருத்துவமனை

நிவர் புயலால் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்கிறது. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிசாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நேற்றிரவு தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் குரோம்பேட்டை டிபி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தங்கி இருக்கும் அறைகளில் மழை நீர் புகுந்தது. நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகிவற்றை வாங்குவதற்குக்கூட வெளியே செல்ல முடியாத நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளிலேயே தண்ணீர் புகுந்துள்ளதால் படுக்கையைவிட்டு அசையமுடியாத நிலையில் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் மழை நீர்

நேற்றும் (நவ.25) இதேபோல் தண்ணீர் புகுந்த நிலையில், மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. அதைப் போல உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நிவர் புயல்: மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை!

ABOUT THE AUTHOR

...view details