தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்! - மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம், மணிக்கு 6 கி.மீ. வேகத்திலிருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல்

By

Published : Dec 8, 2022, 1:39 PM IST

Updated : Dec 8, 2022, 2:22 PM IST

சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று (டிச.8) அதிகாலை, மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. பின்னர் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது மாண்டஸ் புயலின் வேகம், மணிக்கு 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, நேற்று (டிச.7) புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், அன்று இரவு 11.30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டிருந்தது.

இப்புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (டிச.9) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Last Updated : Dec 8, 2022, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details