தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.11 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2.11 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த 20 செல்போன்களை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

By

Published : Aug 17, 2022, 9:12 AM IST

Published : Aug 17, 2022, 9:12 AM IST

Customs officers  chennai airport  twenty mobile phone seized  mobile phone in chennai airport  gold seized in chennai airport  சென்னை விமான நிலையம்  சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்  சுங்கத்துறை அலுவலர்  தங்கம் மற்றும் விலை உயர்ந்த 20 செல்போன்  ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்  ஏா்ஏசியா விமானம்  கல்ப் ஏா்வேஸ்
தங்கம் பறிமுதல்

சென்னை:இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று (ஆகஸ்ட் 16) சென்னை சா்வதேச விமான நிலைத்திற்கு வந்தது. இதில், வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது (37), இலங்கையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (29) ஆகிய இருவரையும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.57.5 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கப்பசையை கைப்பற்றினா். இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏா் ஆசியா விமான பயணிகளை சோதனையிட்டபோது, அலி முகமது (34) என்ற பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 60 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா். மேலும், ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 20 செல்போன் போன்களையும் பறிமுதல் செய்தனா். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்த கல்ப் ஏா்வேஸ் விமான பயணிகளை சோதனை செய்த போது, அதில் வந்த சென்னையை சோ்ந்த ஜலாலுல்லா சுல்தான் (23) என்பவரிடம் இருந்து, ரூ.15.05 லட்சம் ரூபாய் மதிப்பிலான 237 கிராம் தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர். கைது செய்யப்பட நான்கு பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புடைய மெத்தோகுயிலோன் போதைப்பவுடா் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details