தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தின் கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல்! - news in tamil

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் தங்கக் கட்டிகளை விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான மர்ம நபரை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

விமான கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்!
விமான கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்க கட்டிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:25 AM IST


சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றைய முன்தினம் (நவ.5) இரவு வந்துள்ளது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கிய பின் அதே விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தது.

இதை அடுத்து விமான நிறுவன லோடர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விமானத்தின் கழிவறைத் தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை அடுத்து, விமான லோடர்கள் அந்த பார்சல் குறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பார்சலை எடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர். வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்த பின், பார்சலைப் பிரித்து பார்த்தபோது, அதில் 6 தங்கக் கட்டிகள் இருந்தாக கூறப்படுகிறது.

இதை அடுத்து அந்த கட்டிகள் இருந்த பார்சலை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், சுங்க அதிகாரிகள் பார்சலை கைப்பற்றி தங்கக் கட்டிகளை ஆய்வு செய்துள்ளனர். கடத்தி வரப்பட்ட 6 தங்கக் கட்டிகளின் எடை 1.6 கிலோ எனவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், தங்கக் கட்டிகள் கொண்ட பார்சல் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், விமானத்தில் உள்ள கேமரா காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளனர்.

சென்னைக்கு வழக்கமாக துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகின்றது. ஆனால் தற்போது முதல் முறையாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து, சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தால் விமான நிலைய அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'

ABOUT THE AUTHOR

...view details