சென்னை தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் பகுதியில் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டின் வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு அடி அளவு கொண்ட குட்டி முதலை ஒன்று வந்தது. இதைப் பார்த்த குழந்தைகள் அலறி அடித்து அங்கிருந்து ஓடினர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் குட்டி முதலையை பாதுகாப்பாக பிடித்து வைத்தனர்.
அதன்பின் இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயிரியல் பூங்கா அலுவலர்கள் குட்டி முதலையை பிடித்து சென்றனர்.
சதானந்தபுரத்தில் உள்ள பெரிய ஏரியில் முதலை குட்டிகள் இருப்பதாகவும் உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வெண்பொங்கல் உண்டு கோயிலைக் காக்கும் பணியில் ஈடுபடும் அதிசய முதலை!