தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை - etv bharat

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை
பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை

By

Published : Aug 4, 2021, 11:03 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2019 - 2020 ஆம் ஆண்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் (உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவறை எழுத்தர்) அனுமதிக்கப்பட்ட (sanctioned post) பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மேற்காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்களைப் பள்ளிவாரியாக EMIS இல் உடனடியாக பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடக்கமா?

ABOUT THE AUTHOR

...view details