இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு பொன்பரப்பி வன்முறை தொடர்பாக கள ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தேர்தலை முன்னிட்டு பொன்பரப்பி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு சார்பில் அங்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆய்வு நடத்தினோம்.
'திருமாவின் வெற்றியை தடுக்கவே பொன்பரப்பி கலவரம்' - பின்னணியை வெளியிட்ட சிபிஎம்! - பாமக
சென்னை: "பொன்பரப்பி வன்முறை அரசியல் ஆதயத்திற்காக பாமக கட்சி இந்து முன்னனி உதவியுடன் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது" என்று, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதில் பொன்பரப்பி வன்முறை அரசியல் ஆதயத்திற்காக பாமக கட்சி இந்து முன்னணி உதவியுடன் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கத்தமான தாக்குதல் இது. பாமக தங்கள் சாதியைப் பயன்படுத்தி திருமாவளவன் வெற்றி பெறக் கூடாது, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு உரிமையை பறிப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்தக் கலவர சம்பவத்திற்கு இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரனும் உடந்தை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதை விட இங்கு திருமாவளவன் தோல்வியடைய வேண்டும் என்றே பாமக தாக்குதலை நடத்தியுள்ளது. அரசியல் வெற்றி, தோல்விக்கு சாதியை பயன்படுத்தி இதுபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிப்பது ஒரு ஜனநாயக படுகொலை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது' என்று அவர் தெரிவித்தார்.