சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடங்கள் குறைக்கப்பட்டன. அதில் பெரியார் சிந்தனைகள், ஜனநாயகம், தமிழர்களின் போராட்ட வரலாறுகள் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகளை மீண்டும் இணைக்க, கோரிக்கை வைத்து வாசிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மீண்டும் பெரியார் சிந்தனைகளைச் சேர்க்க வேண்டும்' - தமிழ்நாடு எல்லைக்கான போராட்டம்
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், தமிழர்கள் வரலாறுகளைத் திரும்ப இணைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிந்தனைகளை மீண்டும் சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செயல்படும் ஊர் கூடி வாசிக்கும் இயக்கத்தின் சார்பில், சென்னை டிபிஐ வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பட்டத்தின்போது, “நம் மண்ணின் மதச்சார்பற்ற வரலாறு, பகுத்தறிவு, சமூக நீதிக் கண்ணோட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள், பெண் உரிமை வரலாறு, ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு எல்லைக்கான போராட்டம் போன்றவற்றை நீக்கியதைத் திரும்பப்பெற வேண்டும்” என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.