சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஒரு வருடம் கொண்டாட்டம்:
விழாவின் முடிவில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இன்னும் கரோனா பாதிப்பு உள்ள காரணத்தால் குறைவான நபர்கள் கொண்டு மூத்த தலைவர் சங்கரய்யா பிறந்த நாளை கொண்டாடவுள்ளோம்.
2021ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதிவரை ஒரு வருடம் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.