சென்னை: சென்னையில் அடிக்கடி இது போன்று வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதால் நிரந்தரமாக தீர்வுக்கான வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெருமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்ட இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து, நடிகர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிறகட்சி தலைவர்கள் என பலரும் முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,"மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.4000 கோடி செலவிடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புயல், வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது.