தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடகா நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூ வலியுறுத்தல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்

By

Published : May 29, 2019, 11:11 PM IST


இதுகுறித்து அக்கட்சியின் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

"காவிரி நதி நீர் தமிழ்நாட்டிலுள்ள 12 மாவட்டங்களுக்கு விவசாயம் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டின் காவிரிப் பாசன பகுதியில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கமாக இருந்து வருகின்றது.

கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுத்து வருவதால் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை.

முப்போக நெல் உற்பத்திப் பாதிப்புடன் குடி தண்ணீர் தட்டுப்பாடும் ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தைத் தொடுவது வழக்கமாகஉள்ளது. ஒரு போக சாகுபடியும் சரியாக செய்ய முடியவில்லை.

இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிக்கு ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் வழங்க வேண்டுமென்று காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பளித்துள்ளது. பிப்ரவரி முதல் மே மாதம் முடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 2.5 டிஎம்சி வழங்க வேண்டும். அதன்படி மே மாதம் வழங்க வேண்டிய தண்ணீரையும் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தின் துணை நதிகளின் கட்டப்பட்டுள்ள அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது. ஆகவே கர்நாடக அரசு உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறாமல் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசை வற்புறுத்துகிறோம்" என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details