இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜ் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்று பொதுவாழ்வுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் கக்கன்.
முன்னாள் அமைச்சர் கக்கனின் வீட்டை காலி செய்ய கூடாது: அரசுக்கு கம்யூ. வேண்டுகோள் - காமராஜ்
சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கனின் வீட்டை காலி செய்ய தமிழக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுவது மிகுந்த கவலையளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கக்கனுக்கு செந்தமாக வீடு இல்லாத நிலையில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது அரசு சார்பாக சிறிய வீடு ஒன்று வழங்கப்பட்டது. தற்போது அரசு, அவ்வீட்டை காலி செய்திட வேண்டும் என்று கக்கன் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுவது மிகுந்த கவலைக்குரியது. எம்ஜிஆர் வழங்கிய வீடு பழுதடைந்து இருக்குமேயானால் அதனைப் புதுப்பித்து தர வேண்டும் அல்லது வேறொரு வீட்டை வழங்க அரசு முன் வரவேண்டும்.
இரண்டும் இன்றி, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் அவர்கள் எங்கே செல்வார்கள். கக்கன் குடும்பத்தினருக்கு அரசு எதிராக செயல்படுவதை கைவிட்டு, அவரது குடும்த்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.