தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
மத்திய அரசின் உத்தரவின் பேரில், புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, மும்பையிலிருந்து விமானம் மூலம் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன.