தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புனே-சென்னை வந்தடைந்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் - chennai airport

புனேவில் இருந்து எட்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

சென்னை வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  தடுப்பூசி  கரோனா தடுப்பூசி  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா  கோவிஷீல்ட் தடுப்பூசி  புனேவில் இருந்து சென்னை வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  கோவிஷீல்ட்  vaccine arrival  corona vaccine  covid vaccine  Covishield vaccine  Covishield  vaccine arrived to chennai  vaccine arrived in chennai from pune  chennai airport  covishield vaccine arrived from pune to chennai
வந்தடைந்த தடுப்பூசிகள்

By

Published : Sep 3, 2021, 6:53 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதனடிப்படையில், நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

வந்தடைந்த தடுப்பூசிகள்

இந்நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 67 பார்சல்களில், சுமார் எட்டு லட்சம் கோவிஷீல்ட் (covishield) தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

அதேபோல் ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் ஏழு பார்சல்களில் 95 ஆயிரத்து 250 கோவேக்சீன் (co vaccine) தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் இந்தத் தடுப்பூசிகளை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மறுபடியும் முதல்ல இருந்தா... இந்தியாவில் புதிய வைரஸ்

ABOUT THE AUTHOR

...view details