சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இன்று ஒரேநாளில் 850 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதியதாக 850 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவ. 7ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து ஆயிரத்து 506 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில், புதியதாக 850 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 776 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த 27 லட்சத்து 9 ஆயிரத்து 80 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களில் தற்போது, மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 474 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில், குணமடைந்த 958 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 62ஆயிரத்து 386 என உயர்ந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 2 நோயாளிகளும் கரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
0.9% பாதிப்பு மீண்டும் உயர்வு
இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 220 என உயர்ந்துள்ளது. சென்னையில் 129 பேருக்கும் கோயம்புத்தூரில் 96 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நோய்த்தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 0.9 என்று மீண்டும் உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை மாவட்டம் - 5,55,431
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,47,528
செங்கல்பட்டு மாவட்டம் - 1,72,358
திருவள்ளூர் மாவட்டம் -1,19,609
ஈரோடு மாவட்டம் - 1,04,760
சேலம் மாவட்டம் - 1,00,292
திருப்பூர் மாவட்டம் - 95,868
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 77,754
மதுரை மாவட்டம் - 75,292
காஞ்சிபுரம் மாவட்டம் - 75,168
தஞ்சாவூர் மாவட்டம் - 75,597
கடலூர் மாவட்டம் - 64,192
கன்னியாகுமரி மாவட்டம் - 62,494
தூத்துக்குடி மாவட்டம் - 56,374
திருவண்ணாமலை மாவட்டம் - 55,058
நாமக்கல் மாவட்டம் - 52,546
வேலூர் மாவட்டம் - 49,965