தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவீன கரோனா தொற்றுப் பரிசோதனை - 30 நிமிடத்தில் முடிவு - chennai district news

துபாய் செல்ல கூடிய அனைத்துப் பயணிகளும் 4 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்து முடிவுகளை 30 நிமிடங்களில் பெற்று செல்கின்றனர்.

corono test
corono test

By

Published : Aug 8, 2021, 10:34 AM IST

சென்னை:சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் செல்லும் பயணிகளுக்கு, இதுவரை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டுவந்தது.

இதுகுறித்து, கடந்த வாரம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விமானப் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக, நவீன கரோனா தொற்றுப் பரிசோதனை முறையை அமல்படுத்தஉள்ளதாக தெரிவித்தார்.

சென்னை விமான நிலையம்

அதன்படி நேற்று முதல் விமான நிலையத்தில் நவீன கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் பயணிகளுக்குப் பரிசோதனை செய்து 30 நிமிடத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. இதற்குக் கட்டணமாக, ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவுப் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details