தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6,993 பேருக்கு கரோனா! - Corona for 6993 newcomers in Tamil Nadu today

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,993 பேருக்கு இன்று (ஜூலை.27) புதிதாகக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 6,993 பேருக்கு கரோனா உறுதி
மேலும் 6,993 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Jul 27, 2020, 7:47 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.27) ஒரே நாளில் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் 1,138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்; 77 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் ஆகவும், சென்னையில் 95 ஆயிரத்து 857ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் கரோனாவால் இதுவரை 3 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை:

சென்னை - 95,857 பேர்

செங்கல்பட்டு - 12,717 பேர்

திருவள்ளூர் - 12,320 பேர்

மதுரை - 10,057 பேர்

காஞ்சிபுரம் - 7,527 பேர்

திருவண்ணாமலை - 5,376 பேர்

வேலூர் - 5,236 பேர்

விருதுநகர் - 5,302 பேர்

தூத்துக்குடி - 5,896 பேர்

திருநெல்வேலி - 3,963 பேர்

தேனி - 4,053 பேர்

ராணிப்பேட்டை - 4,107 பேர்

கன்னியாகுமரி - 3,849 பேர்

திருச்சிராப்பள்ளி - 3,604 பேர்

ராமநாதபுரம் - 3,094 பேர்

சேலம் - 3,185 பேர்

கோயம்புத்தூர் - 3,775 பேர்

கள்ளக்குறிச்சி - 3,303 பேர்

விழுப்புரம் - 3,270 பேர்

கடலூர் - 2,525 பேர்

திண்டுக்கல் - 2,451 பேர்

சிவகங்கை - 2,123 பேர்

தஞ்சாவூர் - 2,160 பேர்

தென்காசி - 1,794 பேர்

புதுக்கோட்டை - 1,715 பேர்

திருவாரூர் - 1,416 பேர்

அரியலூர் - 876 பேர்

திருப்பத்தூர் - 958 பேர்

ஈரோடு - 645 பேர்

திருப்பூர் - 737 பேர்

நீலகிரி - 731 பேர்

கிருஷ்ணகிரி - 776 பேர்

நாகப்பட்டினம் - 587 பேர்

தருமபுரி - 732 பேர்

நாமக்கல் - 556 பேர்

கரூர் - 371 பேர்

பெரம்பலூர் - 343 பேர்

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளின் விவரம்:

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 790 பேர்

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 514 பேர்

ரயில் மூலம் வந்தவர்கள் - 425 பேர்

இதையும் படிங்க:கரோனா வைரசால் தண்ணீரில் வாழ முடியாது; வதந்திகளை நம்பாதீர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details