தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 1.232; இறப்பு - 14 - கரோனா பாதிப்பு நிலவரம் தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 232 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று (டிச. 9) கண்டறியப்பட்டுள்ளது.

Corona status tamilnadu
கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Dec 9, 2020, 9:07 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 69 ஆயிரத்து 824 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வசித்து வரும் ஆயிரத்து 217 நபர்கள், பிகாரில் இருந்து வந்த நான்கு நபர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மூன்று நபர்கள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த தலா இரண்டு நபர்கள், டெல்லி, உத்தரகாண்ட், வங்கதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என ஆயிரத்து 232 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 23 லட்சத்து 80 ஆயிரத்து 758 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 20 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் என 10 ஆயிரத்து 491 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 315 நபர்கள் இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 693 உயர்ந்துள்ளது.

கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் 7 நோயாளிகள் என 14 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 836 என உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 2,18,549

கோயம்புத்தூர் - 49,954

செங்கல்பட்டு - 48,414

திருவள்ளூர் - 41,516

சேலம் - 30,527

காஞ்சிபுரம் - 27,985

கடலூர் - 24,381

மதுரை - 19,971

வேலூர் - 19,674

திருவண்ணாமலை - 18,828

தேனி - 16,687

தஞ்சாவூர் - 16,659

விருதுநகர் - 16,050

கன்னியாகுமரி - 15,900

தூத்துக்குடி - 15,820

ராணிப்பேட்டை - 15,712

திருப்பூர் - 15,972

திருநெல்வேலி - 15,002

விழுப்புரம் - 14,743

திருச்சிராப்பள்ளி - 13,667

ஈரோடு - 12,845

புதுக்கோட்டை - 11,229

கள்ளக்குறிச்சி - 10,715

திருவாரூர் - 10,620

நாமக்கல் - 10,658

திண்டுக்கல் - 10,512

தென்காசி - 8,147

நாகப்பட்டினம் - 7,807

நீலகிரி - 7,619

கிருஷ்ணகிரி - 7,554

திருப்பத்தூர் - 7,328

சிவகங்கை - 6,386

ராமநாதபுரம் - 6,246

தருமபுரி - 6,194

கரூர் - 4,940

அரியலூர் - 4,598

பெரம்பலூர் - 2,247

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 927

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1009

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: நெருங்கும் ஒரு கோடி பாதிப்பு; கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து தப்புமா இந்தியா?

ABOUT THE AUTHOR

...view details