தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் சென்னை - கொல்கத்தா செல்ல முயன்ற கரோனா நோயாளி - தப்ப முயன்ற கரோனா நோயாளி

சென்னை: ஹைதராபாத் வழியாக விமானம் மூலம் செல்ல முயன்ற மேற்குவங்க கரோனா நோயாளி, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கரோனா நோயாளி
corona affect passenger

By

Published : May 15, 2021, 2:17 PM IST

சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு காலை 9.05 மணிக்கு செல்லும் ஏர்ஏசியா விமானம், இன்று (மே.15) சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 50 பயணிகள் பயணிக்கவிருந்தனர். விமானநிலைய அலுவலர்கள் பயணிகளை சோதனை செய்து விமானத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கரோனா அறிகுறிகளுடன் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுர்ஜித் (22) என்பவரை விமான நிலைய அலுவலர்கள் சோதித்தனர். அவரிடமிருந்த மருத்துவ சான்றிதழ் மூலம் சுர்ஜித்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மேற்கு வங்கத்திலிருந்து கட்டடத் தொழிலாளியாக சென்னை வந்ததும், தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்புவதும், அங்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருந்ததும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சுர்ஜித்தின் பயணத்தை ரத்து செய்த அலுவலர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சென்னை விமான நிலைய சுகாதாரத்துறையினர், சுர்ஜித்திற்கு முழு கவச உடைய அணிவித்து தனி ஆம்புலன்ஸில், தாம்பரம் சானிடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டுக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் உள்நாட்டு விமானநிலையம் பயணிகள் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details