தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிஸ் கட்ட அனுமதி: ரங்கராஜன் நரசிம்மன் வழக்கில் ட்விஸ்ட்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

allowed kallakurichi collector office
allowed kallakurichi collector office

By

Published : Mar 30, 2023, 3:47 PM IST

சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். கோயில் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரதச் சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயில் நிலத்திற்கான வாடகை தொகை உரிய முறையில் நிர்ணயிக்கப்பட்டு, முறையாக வழங்கப்படும் என்றும், அர்த்த நாரீஸ்வரர் கோயிலை 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அற நிலையத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 2020ஆம் ஆண்டு ஜூலை முதல் மாதம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வாடகை தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, அர்த்தநாரீஸ்வரர் கோயிலை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், முறையாகப் பராமரித்து பூஜைகளை நடத்த வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details