சென்னை:மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறையின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது. வெளிநாடுகளுக்குச் சமையல் வேலை உட்படச் சிறு பணிகளுக்கு ஆட்களை அனுப்ப, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இந்த அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக பணிபுரிந்த, இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர், குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க, ரூபாய் 2 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகவும், அத்தொகையைச் சொத்துக்கள் வாங்கப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.