தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடி - central railway station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

ஊர் சுற்றுவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன்களை திருடி விற்ற காதல் ஜோடிகள்!!
ஊர் சுற்றுவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன்களை திருடி விற்ற காதல் ஜோடிகள்!!

By

Published : Jun 18, 2022, 8:17 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை பயணி ஒருவரின் செல்போனை பெண் ஒருவர் திருடிய போது பொதுமக்களின் உதவியோடு சென்ட்ரல் ரயில்வே போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர்.

சென்னை ஆவடியை சேர்ந்த ஜெயஸ்ரீ(21) தாயை இழந்த இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும், ஜெயஸ்ரீ அடிக்கடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். அப்போது திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் கொத்தனார் வேலைக்கு செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் அடிக்கடி வரும் போது, இருவரும் காதலிக்க துவங்கியதாக ஜெயஸ்ரீ விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சந்தோஷமாக வெளியே செல்ல முடிவு செய்த போது, கையில் பணம் இல்லாததால் இருவரும் சேர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன்களை திருட முடிவு செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 4 நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்ஜ் செய்வதற்காக போடப்பட்டிருக்கும் செல்போன்கள், அதிகாலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய ரயிலில் ஜன்னலோரமாக இருப்பவர்களின் செல்போன்களை திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட செல்போன்களை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து இருவரும் சினிமா, மெரினா கடற்கரை, பூங்கா என பல இடங்களுக்கு சென்று சந்தோஷமாக இருந்ததாகவும், பின்னர் இரவு தங்குவதற்கு மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து தங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இதேபோன்று பயணி ஒருவரிடம் செல்போனை திருடியபோது பயணிகள் மற்றும் சென்ட்ரல் காவல் நிலைய போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்த்திபனையும் பிடித்து இருவரிடமிருந்து திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!

ABOUT THE AUTHOR

...view details